கைலை கைலாசம் தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை

கைலை மலை திருக்கயிலாய மலை கைலாசம்

கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் எவன் ஒருவன் கைலாயத்தை கண்டு தரிசனம் செய்கின்றானோ அவனுடைய 21 தலைமுறைகள் முக்தி அடைகின்றன. முன்னோர்கள் (பித்ருக்கள்) பலர் செய்த புண்ணியத்தின் பலனாகவே ஒருவருக்கு இந்த ஜன்மத்தில் கைலாய மானசரோவர் தரிசனம் கிட்டும் என்கிறது புராணங்கள். தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இங்கு ஆறடி அகலமுள்ள சிறிய குகையில் சிவன் பஞ்ச லிங்கங்களாக அருள்பாலிக்கிறார் தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்

 • கயிலை-மலை.jpg

  கைலை மலை திருக்கயிலாய மலை கைலாசம்

  கைலாய மலையின் வடக்குமுகம் வாம தேவமுக தரிசனம் என்றும் தெற்கு முகம் அகோர முக தரிசனம் என்றும்,மேற்கு முகம் சத்யோஜாத முக தரிசனம் என்றும் கிழக்கு முக தரிசனம் தத்புருஷ முக தரிசனம் என்றும் அழைக்கபடுகிறது.இதில் தெற்கு முகம் தான் இந்தியாவை நோக்கி உள்ளது.. தேவ லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கங்கை இறங்கிய ஜடா முடியும் சிவபெருமானின் மூன்று கண்களும் உள்ள முகம். மேலும் இம்முகத்தில் அடாத செயல் செய்த இராவணன் திருக்கயிலை மலையை கட்டி இழுத்த அக்ஷ்ய வட கயிற்றின் தழும்பும் உள்ளதுகைலாயம்

  கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் எவன் ஒருவன் கைலாயத்தை கண்டு தரிசனம் செய்கின்றானோ அவனுடைய 21 தலைமுறைகள் முக்தி அடைகின்றன. முன்னோர்கள் (பித்ருக்கள்) பலர் செய்த புண்ணியத்தின் பலனாகவே ஒருவருக்கு இந்த ஜன்மத்தில் கைலாய மானசரோவர் தரிசனம் கிட்டும் என்கிறது புராணங்கள்.


 • வெள்ளியங்கிரி-ஆண்டவர்

  தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை கோவில்

  தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இங்கு ஆறடி அகலமுள்ள சிறிய குகையில் சிவன் பஞ்ச லிங்கங்களாக அருள்பாலிக்கிறார் தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்

  வெள்ளியங்கிரி மலையடிவாரம் பூண்டி வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் செளந்திர மனோன்மணி பார்வதியாகவும் இவருடன் விநாயகர், முருகன் என பிற கடவுள்களும் உள்ளனர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

 • திருவண்ணாமலை

  சிவபெருமான் மலை கோவில்

  துரகிரியில் காண்போம் அருள்மிகு சுவாமிகள் கயிலாயத்தில் வீற்றிருக்கும், எம் பெருமான் எழுந்தருளியிருக்கும் பல இடங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது சதுரகிரி மலையாகும். முப்பத்து முக்கோடி தேவர்கள் நிறைந்த இடம் என்றும், வேத மந்திரங்களால் சு+ழப்பட்ட இடம் என்றும் சதுரகிரியைப் பற்றிப் புராண குறிப்புக்கள் கூறுகின்றன. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு அசுத்த தத்துவமாகிய இருளினை நீக்கும் வண்ணம், சந்திர, சு+ரிய அக்னிகளின் ஒளியை வீசுகின்ற தன்மையில் சதுரகிரி மலை.

  திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.